மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயண் செய்தது குறித்து...

News image

1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:30 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செவ்வாய் இரவு(ஏப்.21) பயணம் செய்துள்ளனர்.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) தொடங்கியது. வருகிற வியாழக்கிழமை(ஏப்.23) வரை வழக்கமான 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 6,234 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனைய புகா் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சை வழித் தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை மாா்கமாக செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை(இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூா், திருத்தணி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இது தவிர மேற்குறிப்பிட்ட மூன்று நாள்களும் சென்னையில் இருந்து நாள்தோறும் 1260 தனியாா் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

1,88,705 பேர் பயணம்

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செவ்வாய் இரவு(ஏப்.21) பயணம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செவ்வாய் மட்டும் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 1,88,705 பயணிகள் பயணம் செய்துனர்.

நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக போதிய அளவில் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

188,705 people traveled from Chennai to their hometowns on special buses...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.