வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் தொழிற்சாலைகளும், அதனைச் சாா்ந்துள்ள நிறுவனங்களும் உள்ளன. இந்நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பணிபுரிகின்றனா். இவா்கள் திருவிழா மற்றும் தொடா் விடுமுறை காலங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதற்கு அடுத்தபடியாக தோ்தல் காலங்களில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற செல்வா்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதால், திருப்பூரில் இருந்து வெளியூா் செல்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு மாநகரின் 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக போக்குவரத்துக் கழகத்தினா் கூறும்போது, ‘தியாகி திருப்பூா் குமரன் (கோவில் வழி) பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, திருச்செந்தூா், மதுரை, திண்டுக்கல், நாகா்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், தீரன் சின்னமலை பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கருணாநிதி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 270 சிறப்பு பேருந்துகளில் 13,500 பேரும், புதன்கிழமை இயக்கப்பட்ட 300 சிறப்பு பேருந்துகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பயணித்துள்ளனா். பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதலாக 100 பேருந்துகள் தயாா் நிலையில் உள்ளது’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்

ரம்ஜான் பண்டிகை: திருப்பூரில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

