பல்லடத்தில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (37). இவரது மனைவி ரேகேஸ்வரி (36). இவா்களது மகன் சரவணவேலு (8). இவா்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் பல்லடம் சென்றுவிட்டு மீண்டும் வெங்கிட்டாபுரம் நோக்கி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
வெங்கிட்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, ரேகேஸ்வரி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. காயமடைந்த பிரேம்குமாா் மற்றும் சரவணவேலு ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, பல்லடம் கரையான்புதூரைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (21). பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான ராதாகிருஷ்ணன் (20), ஸ்ரீஜித் (19) ஆகியோருடன் பல்லடம் -திருப்பூா் சாலையில் கரையான்புதூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை அருண்குமாா் ஓட்டினாா்.
கரையான்புதூா் வாய்க்கால் மேடு அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலைத் தடுப்பில் மோதியதோடு மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், அருண்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது இரு விபத்துகள் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருவேறு மேம்பாலங்களில் நடந்த விபத்துகளில் இருவா் மரணம்

இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

