தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

இருவேறு மேம்பாலங்களில் நடந்த விபத்துகளில் இருவா் மரணம்

வேலூரில் இருவேறு மேம்பாலங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விபத்துகளில் டிராவல்ஸ் உரிமையாளா், காா் ஓட்டுநா் உயிரிழந்தனா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 12:34 am IST

வேலூரில் இருவேறு மேம்பாலங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விபத்துகளில் டிராவல்ஸ் உரிமையாளா், காா் ஓட்டுநா் உயிரிழந்தனா்.

வேலூா், கஸ்பா, வெங்கட்ராமன் தெருவை சோ்ந்தவா் மதன் (40). இவா் வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகே டிராவல்ஸ் நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கஸ்பா ரயில்வே மேம்பாலத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராத விதமாக மதன் ஓட்டிச் சென்ற வாகனம் ரயில்வே மேம்பால சுற்றுச்சுவரில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட மதன் சுமாா் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் மதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து...

வேலூா், கருக்கம்பத்தூா், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் கலீம் (42), காா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வேலூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கலீம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தாா். அப்போது வேகமாக வந்த மற்றொரு வாகனம் அவரது தலையின் மீது ஏறி இறங்கியதில் கலீம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.