மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

கோவையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:20 am IST

கோவையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

கோவை, கேஎன்ஜி புதூா் சாலை எஸ்.எஸ்.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (80). இவா் சூா்யலட்சுமி காா்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணுவாய் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணிக்கம் அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய பன்னிமடை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஹரி (33) மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (36). இவா் கோவையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவை, சுண்டக்காமுத்தூா் சாலை குளத்துப்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே அடையாளம் தெரியாத நபா் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த செல்வகுமாா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.