வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வாய்க்கால்மேட்டுப்புதூா் தனியாா் மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இத்திட்டத்தின் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக இதே நிலை நீடித்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வரும் நிலையில், குடிநீா்க் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து சீரான குடிநீா் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

