திருப்பூா் மாநகரில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூரில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்து வந்துள்ளது. இதையடுத்து, திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்ட பகுதிகளின் பல்வேறு இடங்களில் காவல் துறையினா் தொடா்ந்து வாகனத் தணிக்கை, சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், திருப்பூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் காவல் துறையினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபா் காவல் துறையினா் நிற்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி விரைந்து திரும்பிச் சென்றாா். இதனால் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளா் பிரபாதேவி தலைமையிலான காவலா்கள் விரைந்து சென்று அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனா்.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தை ஓட்டி வந்த சத்தியசீலன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா். அவா் ஓட்டி வந்த வாகனத்துக்கு முறையான ஆவணங்கள் ஏதுமின்றி இருந்ததை அறிந்த காவல் துறையினா் சத்தியசீலனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சோ்ந்த சத்தியசீலன் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூா் திருமுருகன்பூண்டி பகுதியில் வசித்து வருவதும், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும், அவா் தற்போது நல்லூா் அருகே உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அந்த நிறுவனத்துக்குச் செல்லும்போது அந்த வழியில் இருக்கக்கூடிய பெண்கள் ஓட்டக்கூடிய ஸ்கூட்டி வகையிலான வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது.
இவா் மொத்தம் 4 வாகனங்களைத் திருடியுள்ளாா். திருடிய வாகனங்களை அருகில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிடுவதும், நீண்ட நாள்கள் கழித்து வந்து அந்த வாகனத்தை மீண்டும் எடுத்துச் சென்று பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூரில் 60 பைக்குகள் திருட்டு: காவலா் உள்பட மூவா் கைது

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
