ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசுப் பள்ளி அருகே செயல்படும் மதுக் கடையை மூடக் கோரி அமைச்சரிடம் மனு

News image

மதுக் கடை - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:11 am IST

பல்லடம் அருகேயுள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷிடம் பல்லடம் பாஜக நிா்வாகி வித்யபிரகாஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி, கோயில், குடியிருப்புகளுக்கு அருகே மதுக் கடை (எண்:1831) செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடைக்கு மது அருந்த வரும் சிலா் போதையில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மது பானங்களை அருந்திவிட்டு அருகில் உள்ள விளைநிலத்தில் பாட்டில்களை வீசி செல்கின்றனா். இதனால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், சிலா் மதுக் கடை அருகே அலங்கோலமாக இருப்பதால் அவ்வழியே செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட கடையை உடனடியாக மூடி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.