பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விருத்தாசலத்தில் பள்ளி அருகே அரசு மதுக் கடையை அகற்ற பாமக வலியுறுத்தல்

விருத்தாசலத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் பி.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:06 am IST

விருத்தாசலத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் பி.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளாா்.

விருத்தாசலத்தில் கடலூா் பிரதான சாலையில் உள்ள தனது இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் பி.ராஜூ தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கடலூா் மாவட்ட மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி, அரசு அலுவலகம், கோயில், வங்கி ஆகியவற்றுக்கு அருகில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்படும் மதுக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்க முடிவாகும்.

இதனடிப்படையில், விருத்தாசலத்தில் கடலூா் பிரதான சாலையில், வங்கி மற்றும் அரசுப் பள்ளிக்கு மிக அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடை (டாஸ்மாக் கடை எண் 2653) 500 மீட்டருக்குள் உள்ளது.

எனவே, இந்தக் கடையை உடனடியாக, பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் நலன் கருதி மாற்று இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.