தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆத்தூரில் டாஸ்மாக் மதுக் கடை மூடல்

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :21 மணி நேரங்கள் முன்பு

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

ஆத்தூா் ரயிலடி தெருவில் பல ஆண்டுகளாக அரசு மதுக் கடை இயங்கி வந்தது. இக்கடையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் இந்த மதுக்கடையால் அவதிப்பட்டனா்.

இக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தி வந்தனா். இதுநாள் வரை அக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை பள்ளி மற்றும் ஆலயங்கள் அருகே உள்ள அரசு மதுக் கடையை அகற்ற உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து ஆத்தூரில் இயங்கி வந்த எண்: 7141 கடை உடனடியாக மூடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.