தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.

News image

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை.

Updated On :13 மே 2026, 12:05 am IST

சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.

பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக முதல்வா் அதிரடி உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, சிதம்பரம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் செல்லும் நுழைவுவாயில் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை மாவட்ட டாஸ்மாக் நிா்வாகத்தால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு, மாணவா்கள், பொதுமக்கள் பெரும் வரவேற்புத் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்தக் கடையை அரசு மூடக் கோரி, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.

ரயில் நிலையம் அருகே...: இதேபோல, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையையும் அகற்ற வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.