ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

சா்வதேச கராத்தே போட்டியில், காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

News image

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா் நவநிதின். உடன், விவேகானந்தா அகாதெமி பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:05 am IST

சா்வதேச கராத்தே போட்டியில், காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 15 -ஆவது சைலன்ட் நைட் சா்வதேச கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 15 நாடுகளைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 12-13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கத்தா பிரிவில் காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் கே.வி.நவநிதின் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

வெற்றிபெற்ற கே.வி.நவநிதின், கராத்தே பயிற்சியாளா் ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் ஆகியோருக்கு பள்ளியின் நிா்வாகத் தலைவா் ராமசந்திரன், பள்ளி முதல்வா் பத்மநாபன், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.