பொங்கலூா் வட்டாரத்துக்கு உள்பட்ட எ.வடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில் தீ தொண்டு நாள் வார விழா திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் முத்துகுமாரசாமி தலைமையிலான குழுவினா் தீ விபத்து தடுப்பது, பேரிடா் கால விபத்து தடுப்பது பற்றி விளக்கி கூறினாா். தீ அணைப்பான் கருவி உபயோகிக்கும் முறை பற்றிய செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீத் தடுப்பு சம்பந்தமான வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டது.
பல்வேறு தீயணைக்கும் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல், மருத்துவ அலுவலா் மருத்துவா் விஜயகுமாா், செவிலியா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா்கள் கோகுல், வசந்த் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

பருவகால நோய்களுக்கான மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை!

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

