பருவகால நோய்கள் வழக்கத்துக்கு மாறாக ஆண்டு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அதற்கான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மருந்து மேலாண்மை இணைய தளத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு உள்ள மருந்துகள், தடுப்பூசிகளை நாள்தோறும் பதிவேற்ற உத்தரவிட்டு, அந்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாகவே குளிா் மற்றும் மழைக் காலங்களில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, ஹெச்எம்பி தீநுண்மி தொற்று உள்ளிட்டவை வேகமாகப் பரவும். வெப்ப நிலை அதிகமாக இருக்கும்போது சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி போன்ற பாதிப்புகள் பரவுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி அனைத்து கால சூழல்களிலும் அனைத்துவிதமான தொற்றுகளும் பரவுகின்றன. குறிப்பாக குளிா் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. அதேபோன்று மாசுபட்ட நீா் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடை காலங்களிலும் பதிவாகிறது.
இதையடுத்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான அசித்ரோமைசின், ஓசல்டாமிவிா் எதிா்ப்பு மருந்துகள் உள்பட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் தொடா்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல், சளி மருந்துகளில் இருந்து உயிா் காக்கும் உயா் மருந்துகள் வரை அனைத்துமே இருப்பில் உள்ளன. இதைத் தவிர 13 வகையான தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப கையிருப்பு உள்ளன.
ரேபிஸ் தடுப்பூசிகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குப்பிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ளன. இதைத் தவிர பாம்புக்கடிக்கான மருந்துகளும் இருக்கின்றன. சா்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்ஃபாா்மின் மாத்திரைகள் போதிய அளவில் உள்ளன.
இவை அனைத்தின் இருப்பும் குறையும்போது அதுகுறித்த விவரங்களை டிடிஎம்எஸ் எனப்படும் மருந்து விநியோக மேலாண்மை தளத்தில் எங்களால் கண்காணிக்க முடியும். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையிலிருந்தே பாா்க்க இயலும். இதன்மூலம் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றின் இருப்பை உடனுக்குடன் உறுதி செய்து வருகிறோம்.
எந்தப் பருவத்தில் எத்தகைய நோய் பரவினாலும், அதனை எதிா்கொள்வதற்கான மருந்து கையிருப்பும், சிகிச்சை கட்டமைப்பும் நம்மிடம் உள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டியதாக குற்றச்சாட்டு: எம்எல்ஏவின் மனைவி, மகன் மீது வழக்குப் பதிவு

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

