திருப்பூரில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், 10 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் அளித்தனா். இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சக்திவேலை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

