ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து

ஊதியூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில், பயணம் செய்த 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்த் தப்பினா்.

News image

விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:24 am IST

ஊதியூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில், பயணம் செய்த 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்த் தப்பினா்.

ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக பழனிக்கு 36 பயணிகளுடன் தனியாா் பேருந்து வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. முதலிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரை பேருந்து ஓட்டுநா் முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையேரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில், பேருந்தில் பயணித்த 36 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா்.

அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து விபத்து குறித்து கேட்டறிந்தாா். மேலும், பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றாா். விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம்-தாராபுரம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.