மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சைனீஸ் புருக்கோலி கிலோ ரூ. 250-க்கு விற்பனை

நீலகிரி மாவட்டத்தில் சைனீஸ் காய்கறியான புருக்கோலி பற்றாக்குறை காரணமாக கிலோ ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உதகை சந்தையில் விற்பனைக்கு தயாராக உள்ள புருக்கோலி.

Published On :1 நவம்பர் 2026, 12:32 am IST

நீலகிரி  மாவட்டத்தில் சைனீஸ் காய்கறியான புருக்கோலி பற்றாக்குறை காரணமாக கிலோ ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் மற்றும் சைனீஸ் காய்கறிகள் அதிக அளவு பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில் உதகை மாா்க்கெட் சந்தையில் புருக்கோலி கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை  கிலோ ரூ.100 முதல் ரூ.150  வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது  கிலோ ரூ.200 முதல்  ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மழையால் பாதிக்கு மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும், குளிரின் தாக்கத்தாலும், சூப் உபயோகம்  அதிகம் இருப்பதாலும் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8  ஆயிரம் வரை விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.