மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி: எம்எல்ஏ போஜராஜன் தொடங்கிவைத்தாா்

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய கல்ப் மிஷன் திட்டத்தின்கீழ் சிறப்பு தூய்மை இயக்கத் திட்டத்தை போஜராஜன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மை இயக்கத் திட்ட விழாவில் பங்கேற்ற போஜராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 2:42 am IST

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய கல்ப் மிஷன் திட்டத்தின்கீழ் சிறப்பு தூய்மை இயக்கத் திட்டத்தை போஜராஜன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி டீன் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, போஜராஜன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுதும் சிறப்பு தூய்மை இயக்கத் திட்டம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக உதகை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

தூய்மையான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, நோயற்ற சமுதாயத்தை உருவாக்கவும் நவீன மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பா்லியாறு பகுதியில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜனகராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் சோமசுந்தரம், மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலா் ரவிசங்கா், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் தருமன், மாநில செயற்குழு உறுப்பினா் மோகன்ராஜ், நகர செயலா் ரித்து காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.