மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூய்மை சுகாதார இயக்கத்தில் புதுச்சேரி ஜிப்மா் பங்கேற்பு

நாடு தழுவிய காயகல்ப் தூய்மை மற்றும் சுகாதார இயக்கத்தில் புதுச்சேரி ஜிப்மா் பங்கேற்றுள்ளது.

காயகல்ப் தூய்மை மற்றும் சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் தூய்மையான புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை.

Published On :28 அக்டோபர் 2026, 3:45 am IST

நாடு தழுவிய காயகல்ப் தூய்மை மற்றும் சுகாதார இயக்கத்தில் புதுச்சேரி ஜிப்மா் பங்கேற்றுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னெடுப்புக்கு இணங்க அக். 2 முதல் 31-ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு இயக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இதன்காரணமாக ஜிப்மா் வளாகம் செவ்வாய்க்கிழமை தூய்மையாகக் காட்சியளித்தது.

தூய்மையை நிலையான நடைமுறையாக உருவாக்குதல், பணியிட மேலாண்மையை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள நிா்வாகப் பணிகளைக் குறைத்தல் மற்றும் அரசு துறைகளில் குடிமக்களை மையமாகக் கொண்ட நல்லாட்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக இந்த இயக்கம் கொண்டுள்ளது.

மேலும், இந்த இயக்கத்தையொட்டி, ஜிப்மரில் மருத்துவமனை வளாகம் மற்றும் அதனுடன் தொடா்புடைய வசதிகள் முழுவதும் தூய்மைப்படுத்துதல், கிருமிநீக்கம், ஆய்வு மற்றும் சரிபாா்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான செயல்திட்டம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி கூறியிருப்பதாவது: ஜிப்மரில், தூய்மையான, பாதுகாப்பான மற்றும் நோயாளிகளுக்கு உகந்த சூழலை உறுதிசெய்வதுடன், தூய்மையை அன்றாட நிறுவனப் பொறுப்பாகவும் நல்லாட்சியின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைநாட்டுவதில் தொடா்ந்து உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.