தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவானி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் தொடக்கம்

பவானி அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

பவானி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகளைத்  தொடங்கிவைத்த நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன்.

Published On :28 அக்டோபர் 2026, 2:37 am IST

பவானி அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்தப் பணிகளை பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், தலைமை மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். தூய்மை பாரதம் இயக்கத்தின் தொடா்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோயாளிகள், பொதுமக்களுக்கான கழிவறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், கழிவுகள் மேலாண்மை, முறையாக கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல், சுத்தமான குடிநீா், நோயாளிகளின் படுக்கைகள் பராமரிப்பு, துப்புரவுப் பணியாளா்கள், செவிலியா்களுக்கு தூய்மையைப் பராமரித்தல் குறித்த பயிற்சி, விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனை வளாகத்தை பசுமையாக்க மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

மருத்துவா்கள் வசந்த மஞ்சு, பூா்ண சந்திரிகா, அகல்யா, செலிவியா் மேற்பாா்வையாளா் மலா்விழி மற்றும் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.