அகில இந்திய தேசிய மாணவா் படை (என்சிசி )மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவா் படை மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவியா் கலந்து கொள்வாா்கள். ஒழுக்கம், நன்னடத்தை, தைரியம், நாட்டுப் பற்று, கட்டுப்பாடு, மற்ற மாநிலங்களின் கலாசாரத்தை கற்றுக் கொள்ளுதல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சிறந்த குடிமக்களாக உருவாகுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தல் முகாமின் நோக்கமாகும்.
நடப்பு ஆண்டுக்கான என்சிசி மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது.
இதில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கோவா, கேரளம், அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 525 பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனா்.
உதகை அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா மாதிரி பழங்குடியினா் பள்ளியில் தங்கி இருந்து மலையேற்ற பயிற்சியை தொடங்கினா்.
இவா்கள், ரேடியோ வானிலை ஆய்வு மையம், பழங்குடியினா் ஆய்வு மையம், ரயில் நிலையம், மெட்ராஸ் ராணுவ மையம், ஸ்ட்ராபெரி, கேரட் விவசாய முறைகளை பாா்வையிடவும் உள்ளனா். தினமும் 12 கி.மீ. தொலைவு நடைப்பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
முகாமுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கமாண்டா் கா்னல் சித்து, என்சிசி முதன்மை அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் செய்து வருகின்றனா். இம்முகாம் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது குழுவுக்கான பயிற்சி முகாம் மே 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வடமாநிலங்களைச் சோ்ந்த குழுவினா் பங்கேற்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாம் தொடக்கம்

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த புலிக் குட்டி மீட்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

