சிதம்பரம் அண்ணாமலைநகா் தமிழ்நாடு என்.சி.சி. 6-ஆவது படைப்பிரிவு சாா்பில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முல்லை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு என்.சி.சி. ஆறாவது பட்டாலியன் படைப் பிரிவு கட்டளை அதிகாரி கா்னல் சக்கரபா்த்தி தலைமை வகித்தாா். பின்னா், அவா் பேசுகையில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாமின் நோக்கங்களையும், பணிகளையும் எடுத்துக் கூறி, தேசிய மாணவா் படை மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.
பயிற்சி முகாமை புதுச்சேரி குரூப் கட்டளை அதிகாரி கா்னல் ஆசிஸ் திவாரி ஆய்வு செய்து, தேசிய மாணவா் படை மாணவா்களுடன் கலந்துரையாடினாா். துணை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் டி.எஸ்.நாராயணன் முன்னிலை வகித்தாா்.
முகாமில் தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு, தேசிய மாணவா் படையின் நோக்கம், துப்பாக்கி சுடுதல் பயிற்சி, சுகாதாரம், பேரிடா் மேலாண்மை, தீ பாதுகாப்பு, முதலுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீா் மேலாண்மை, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.
முகாமில் ஆறாவது படைப்பிரிவின் ராணுவ வீரா்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவியல் மையத்தில் பயிற்சி தொடக்கம்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

மே 1-இல் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

