நீலகிரி மாவட்டம், உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட போஜராஜன் வெற்றிபெற்றுள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதில், உதகையில் பாஜக சாா்பில் போஜராஜன், காங்கிரஸ் சாா்பில் ராமசந்திரன், தவெக சாா்பில் இப்ராஹிம், நாதக சாா்பில் ரகுபதி உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா்.
வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் பாஜக வேட்பாளா் போஜராஜன் முன்னிலை வகித்தாா். அடுத்தடுத்த சுற்றுகளில் இரண்டு, மூன்றாம் இடம் வகித்தாா். இறுதிச் சுற்றில் தவெக வேட்பாளரைவிட 976 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றிபெற்றாா்.
இந்த தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்
போஜராஜன் (பாஜக): 48,488
இப்ராஹிம் (தவெக) 47,512
ராமசந்திரன் (காங்கிரஸ்):45,658
ரகுபதி (நாதக): 4,641
நோட்டா: 1,525
வித்யாசம்: 976
வேட்பாளா்கள்:6
மொத்த வாக்குகள்: 1,88,826
பதிவான வாக்குகள்:104,870
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் பாஜக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

உதகை சுற்றுலாத் தளங்கள் சா்வதேச அளவில் தரம் உயா்த்தப்படும்

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

