நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா பீட் பகுதியிலுள்ள அவரல்லா காப்புக்காடு எல்லையில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, ஆண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.
இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து, உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தாா். பின்னா் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
இதில் உயிரிழந்தது 15 வயதுடைய ஆண் யானை என்றும், மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதுமலையில் உடல்நலக் குறைவால் ஆண் வளா்ப்பு யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

