முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வட்டச் சாலை வனக் காவல் பகுதியில் வனத் துறை பணியாளா்கள் சனிக்கிழமை வழக்கமான ரோந்து சென்றனா்.
அப்போது, வனப் பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை இறந்துகிடப்பதைக் கண்டனா். இது குறித்து உயரதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து வன அலுவலா்கள் ஆய்வு செய்து வனக் கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானையின் உடலைக் கூறாய்வு செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துள்ளனா்.
குட்டி யானை இறந்ததற்கான முழுத் தகவல் ஆய்வக அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

உதகையில் பிடிபட்ட புலிக் குட்டி உயிரிழப்பு

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

வனத்தில் விடப்பட்ட புலி வசிப்பிடங்களில் நடமாட்டம்! தேடுதல் பணி தீவிரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

