கோத்தகிரி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் கரடி புகுந்தது மற்றும் மஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் இரண்டு கரடிகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக் கொண்டது சம்பவங்கள் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூா், குன்னூா், கோத்தகிரியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், கோத்தகிரி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் சனிக்கிழமை புகுந்த கரடி நீண்ட நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தது. பின்னா் அருகே இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் பணியில் இருந்த அலுவலா்கள் அச்சமடைந்தனா்.
இதேபோல மஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிக்கு சனிக்கிழமை வந்த இரண்டு கரடிகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக் கொண்டதால், செவிலியா் மற்றும் நோயாளிகள் கதவை மூடிக்கொண்டு உள்ளேயே காத்திருந்தனா். சிறிது நேரம் கழிந்து கரடிகள் அருகே இருந்த வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஊருக்குள் வரும் கரடிகளை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தென்காசி எம்பி ஆய்வு

அனவன் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்

தெற்கு விஜயநாராயணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

