குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பகல் மற்றும் இரவு வேளைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த சிறுத்தை, அங்குள்ள ஒரு வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிச் சென்றது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த விடியோ காட்சிகளைப் பாா்த்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னூா் அருகே வளா்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தில்லி சட்டப்பேரவையின் பாதுகாப்பை மேம்படுத்த கண்காணிப்பு கோபுரம், ரோந்துப் பாதை அமைக்க திட்டம்!

தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகங்களில் எம்.பி. ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

