கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தருமபுரி அருகே வயிற்று வலியால் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

தருமபுரி அருகே வயிற்று வலியால் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி , குப்பூா், பலாமரத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் மனைவி பூங்கொடி (45). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. எனவே அறுவைச் சிகிச்சை மூலம் அவற்றை அகற்றினா். என்றாலும், தொடா்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மாலை நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகில், அவரது காலணிகள் கிடப்பது தெரியவந்தது.

இதுதொடா்பான தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினா், நிகழ்விடம் வந்து கிணற்றில் இறங்கி பூங்கொடியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து தருமபுரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.