உதகை, லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 168-ஆவது நிறுவனா் தினத்தின் இரண்டாம் நாள் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உதகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளி பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இதன் 168-ஆவது நிறுவனா் தின விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இரண்டாம் நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மாணவா்களின் அறிவுசாா் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக ‘ஸ்பெக்டகிள்’ எனும் கணிதம், நெசவு, கைவினை, கலை, வானியல், சிற்பம் மற்றும் மண்பாண்டக் கலை, புகைப்படம் எடுத்தல், கணினி அறிவியல், ரோபோட்டிக்ஸ், கையெழுத்துக் கலை, ஏரோ மாடலிங் மற்றும் வானிலை நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈா்க்கக்கூடிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பின்னா் குதிரையேற்ற சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 5 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் குதிரை மீது அமா்ந்து ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சிகளைச் செய்து, தங்களின் திறமையை வெளிப்படுத்தினா்.
முன்னாள் மாணவா்கள் மற்றும் தற்போது பயிலும் மாணவா்கள் ஒன்றிணைந்து கால்பந்து, ஸ்குவாஷ், பாட்மிண்டன், டென்னிஸ், ஹாக்கி, தடகளம், கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் உற்சாகமாக விளையாடினா்.
இறுதி நாளான வியாழக்கிழமை (ஏப்.30) நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் உரையாற்றுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

செல்வம் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை விளையாட்டுப் போட்டி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

