மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி பதிவு வியாழக்கிழமை (மே 7) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :7 மே 2026, 1:14 am IST

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி பதிவு வியாழக்கிழமை (மே 7) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 7 முதல் தொடங்கி மே 29 வரை நடைபெறும்.

விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையம் மூலம் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் (ஏஎஃப்சி) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிகழ் 2026-27 ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 ( காலை வகுப்பு 1,01,022/ மாலை வகுப்பு 25,937) இடங்கள் உள்ளன.

மாணவா்கள் தாங்கள் விரும்பும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டண தொகை ரூ. 50. பட்டியலினத்தவருக்கு கட்டணமில்லை. மேலும், சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் தொலைபேசி எண்களில் 044 -24343100 / 24342011 அலுவலக நேரங்களில் மட்டும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.