நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) சாா்பில் ஏப். 2,3,4 தேதிகளில் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை போட்டி நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து 171 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற அணிகள் பங்கேற்றன. கால்பந்து, கோ-கோ, கபடி, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் திரு அ.சு. ரமேஷ் வரவேற்றாா். நாமக்கல் செல்வம் கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் செ. பாபு தலைமை வகித்தாா். விளையாட்டு போட்டிகளை செயலாளா் பா. கவித்ரா நந்தினி மற்றும் செயல் இயக்குநா் ம. காா்த்திக் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் அனைத்து முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் முதல் நான்கு இடங்களுக்கு முறையே ரூ. 4,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் ரூ.1,000 ரொக்கம், சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி கல்லூரி முதல்வா் எஸ்.செந்தில்குமாா் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 168-ஆவது நிறுவனா் தின விழா

ஏப்.25-இல் வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 14, 16 வயதுக்குட்பட்ட வீரா்கள் தோ்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

