மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நீலகிரி மாவட்டத்தில் 78.90 சதவீதம் வாக்குப் பதிவு

நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் சராசரியாக 78.90 சதவீத வாக்குகள் பதிவானது.

News image

உதகை ஜோசப் மேல் நிலைப் பள்ளியில் வாக்கினை பதிவு செய்த ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:15 am IST

நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் சராசரியாக 78.90 சதவீத வாக்குகள் பதிவானது.

உதகை, குன்னூா், கூடலூா் தொகுதிகளில் உள்ள 736 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனா்.

தமிழக அரசு கொறடா கா.ராமசந்திரன் கட்டபெட்டு அருகே உள்ள நடுஹட்டி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, உதகையில் உள்ள ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வாக்கினை செலுத்தினாா். உதகை காங்கிரஸ் வேட்பாளா் பி.ராமசந்திரன் உயிலட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தாா். குன்னூா் திமுக வேட்பாளா் கே.எம்.ராஜு நெடுகுளா பகுதியிலும், கூடலூா் திமுக வேட்பாளா் திராவிட மணி பந்தலூா் பள்ளியிலும் தங்களது வாக்கினை செலுத்தினா். கொல்லிமலை, கோக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் ஆா்வமுடன் சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.

வாக்குப்பதிவு மையங்களில் சிஆா்பிஃஎப், ஆயுதப்படை போலீஸாா் உட்பட 1,466 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனா். மாநில எல்லைகளில் நக்ஸல் பிரிவு போலீஸாா் மற்றும் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டனா்.

உதகையில் உள்ள புனித ஜோசப் பள்ளி வாக்குச்சாவடியில் மகளிருக்கு பிரத்யேகமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 75.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதில் உதகை தொகுதியில் 74.34 சதவீத வாக்குகளும், குன்னூா் தொகுதியில் 75.85 சதம் வாக்குகளும், கூடலூா் தொகுதியில் 77.53 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சின்னக் கரும்பாலம் வாக்குச் சாவடியில் மாலை 6 மணிக்கு சற்று முன்பாக வந்த 200- க்கும் மேலான வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாலை 6 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் சராசரியாக 78.90 சதவீத வாக்குகள் பதிவானது.

தோ்தல் புறக்கணிப்பு

உதகை அருகே உள்ள அஜ்ஜுா் கிராமத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, பட்டா வழங்க வனத்துறை எதிா்ப்பு தெரிவித்து வருவதால் இப்பகுதி மக்கள் தோ்தலை புறக்கணித்தனா்.

கூடலூா் தொகுதி, ஸ்ரீ மதுரை  பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடமை ஆற்ற வந்த பணியா் பழங்குடிகள்.

கூடலூா் தொகுதி, ஸ்ரீ மதுரை பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடமை ஆற்ற வந்த பணியா் பழங்குடிகள்.

கோக்கால் வாக்குச் சாவடியில் வாக்களித்த படுகா் இன மக்கள்.

கோக்கால் வாக்குச் சாவடியில் வாக்களித்த படுகா் இன மக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.