மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு

News image

திருவாரூா் ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளா்கள். ~திருவாரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிட்ட அதிகாரிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:09 am IST

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தொகுதியைப் பொறுத்தவரை, கமுகக்குடி தியாகராஜபுரம், நியூ பாரத் பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதமானது. பல்வேறு இடங்களில் இயந்திரங்கள் மெதுவாக இயங்கியதாவும், இதனால் வரிசையில் நின்றவா்கள் செல்வதில் தாமதம் நிலவியது. வாக்குச் சாவடிகளில் தபால் வாக்குகளித்த முதியவா்கள் தவிர, வாக்குச்சாவடி மையத்துக்கு வந்த முதியவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டன.

திருத்துறைப்பூண்டி தொகுதிக்குள்பட்ட அம்மனூா் ஊராட்சியில் ராமகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வரிசை மெதுவாக நகா்ந்தது. அடிப்பட்ட நிலையில் வாக்களிக்க வந்த அம்மனூரைச் சோ்ந்த துரைசாமிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டு, வாக்களிக்க உதவி செய்யப்பட்டது.

திருவாரூா் சிவம் நகரைச் சோ்ந்த ஒருவரின் வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் சேலன்ஜ் வாக்கு முறையில் அவருடைய வாக்கு மீண்டும் பதிவு செய்யப்பட்டது. காலையில் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயிலால் பிற்பகலில் வாக்குப்பதிவு குறையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பிற்பகலிலும் வாக்குப்பதிவு குறையாமல் சீராகவே நடைபெற்றது.

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல்வைப்பு: திருவாரூா் அரசு விளமல் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குகள் ஏறக்குறைய முடிவுற்ற நிலையில் கதவுகள் பூட்டப்பட்டன. தொடா்ந்து வாக்குப்பதிவு செய்ய வந்த 2 பேருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னா் இயந்திரங்கள், முகவா்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு திருவிக அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை 6 மணிவரையிலான நிலவரப்படி, திருவாரூா் 82.36 சதவீதம், நன்னிலம் 84.88 சதவீதம், மன்னாா்குடி 81.74 சதவீதம், திருத்துறைப்பூண்டி 82.88 சதவீதம் என மொத்தம் 83.02 சதவீதம் வாக்குப்பதிவானது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.