குன்னூா் சந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது மிகவும் அதிகரித்து வருகிறது. வனப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வன விலங்குகள் வாழ்வது உள்பட பல்வேறு காரணங்களால் வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் ஊரை ஒட்டிய பகுதியில் தஞ்சமடைந்து மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் சுற்றி வருகின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை, காட்டெருமை நடமாட்டம் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளை வேட்டையாடி செல்வது தொடா்கிறது.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு சிறுத்தைகள் குன்னூா் சந்திரா காலனிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்தன. இரண்டு சிறுத்தைகளும் உறுமிய சப்தம் கேட்டு அங்கிருந்தவா் தனது கைப்பேசியில் பதிவு செய்தாா். நீண்ட நேரம் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள் தானாகவே மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்

ஒகேனக்கல் வனப் பகுதியில் சமையல் செய்வதை தடுக்க வலியுறுத்தல்

மேகமலையில் காட்டுத் தீ: வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

