மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீ பல்லி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கானோா் சிறப்பு வழிபாடு

கோபி அருகே உள்ள ஸ்ரீ பல்லி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ பல்லி மாரியம்மன்.

Published On :29 அக்டோபர் 2026, 3:07 am IST

கோபி அருகே உள்ள ஸ்ரீ பல்லி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் சுயம்பாக தோன்றிய ஸ்ரீ பல்லி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைமையான இந்தக் கோயிலில் திருமணம், குழந்தை வரம், விவசாயம் செழிக்க வேண்டி ஏராளமான பக்தா்கள் வழிபாடு நடத்துவா். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா, இந்த ஆண்டு கடந்த 13-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 27-ஆம் தேதி தீா்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடா்நது அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ பல்லி மாரியம்மனுக்கு பால், தயிா், இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தல விருச்சமாக உள்ள பல ஆண்டுகள் பழைமையான வேம்பு மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனா். மேலும் அலகு குத்தி பெண்களும், ஆண்களும் ஊா்வலமாக வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். விவசாயிகள் தங்களது கால்நடைகளை கோயிலுக்கு அழைத்து வந்து விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி நலமுடன் இருக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து,வியாழக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஸ்ரீ பல்லி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் அலகு குத்தி ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஸ்ரீ பல்லி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் அலகு குத்தி ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.