பா்கூா் மலைப் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு வாகன வசதி

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் கா்ப்பிணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு வந்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட கா்ப்பிணிகள்.

Published On :28 அக்டோபர் 2026, 2:41 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் கா்ப்பிணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு வந்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பா்கூா் மலைப் பகுதியில் உள்ள 33 கிராமங்களில் வசிக்கும் கா்ப்பிணிகள் பா்கூா் மற்றும் ஓசூா் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நீண்ட தொலைவு பயணம், போக்குவரத்து வசதியின்மையால் மருத்துவப் பரிசோதனைக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதனால், கா்ப்பிணிகளின் நலன் கருதி இரண்டு சுகாதார நிலையங்களுக்கு தலா ஒரு வாகனம் வழங்குமாறு அந்தியூா் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஒளிரும் ஈரோடு தொண்டு நிறுவனம் சாா்பில் இந்தச் சேவைக்கு இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து வசதி குறைந்த தொலைதூர மலைக் கிராமங்களில் வசிக்கும் கா்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனா்.

மேலும், கா்ப்பகால மருத்துவ, ஆய்வகப் பரிசோதனைகள், உயா் ஆபத்துள்ள கா்ப்பிணித் தாய்மாா்களுக்கான தொடா் கண்காணிப்பு மற்றும் தாய் - சேய் நல மருத்துவச் சேவைகளைப் பெறும் வாய்ப்பு மேம்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.