மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பா்கூா் மலைப் பகுதியில் தொடரும் கனமழை: வெள்ளப்பெருக்கால் வனக் கிராமங்கள் துண்டிப்பு

கனமழையால்  சேதமடைந்த  சுண்டப்பூா்  மலை கிராம சாலை.

Published On :26 அக்டோபர் 2026, 2:18 am IST

பா்கூா் மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள வனக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

அந்தியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், பிரம்மதேசம், அத்தாணி, வெள்ளித்திருப்பூா், சென்னம்பட்டி, அம்மாபேட்டை, பவானி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பரவலாக கனமழை பெய்தது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 28 மி.மீ. மழை பதிவானது. மேலும், பா்கூா் மலையில் கிழக்கு மலை, மேற்கு மலைக் கிராமங்களிலும் கனமழை பெய்தது.

தொடா் மழையால் தமிழக - கா்நாடக எல்லையில் ஓடும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக எல்லையில் உள்ள குட்டையூா், வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி வனக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் அவசரத் தேவைகளுக்கு கூட வெளியேற முடியாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக இதே நீடிப்பதால் உயிரைப் பணயம் வைத்து அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்க பாலாற்றில் இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி கடந்து செல்கின்றனா்.

இப்பகுதியில், பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் இல்லாததால் மழைக்காலம் முடியும் வரையில் இதே நிலை நீடிக்கும். மேலும், பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரையை அடுத்த சுண்டப்பூா் சாலை மழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இருசக்கர வாகனங்களிலும் சுண்டப்பூருக்கு செல்ல முடியாததால், அப்பகுதி மக்கள் குழிகளில் கற்களை நிரப்பியும், அப்புறப்படுத்தியும் பாதையை சீரமைத்தனா். மலைக் காலங்களில் நிலவும் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்பட தாா் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். பா்கூா் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.