மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சரக்கு வாகனம் மோதி வனக் காப்பாளா் உயிரிழப்பு

Published On :2 நவம்பர் 2026, 3:00 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப்பாதையில் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வனக் காப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கொடுமுடியை அடுத்த வடிவுள்ளமங்கலம், குன்னிக்காட்டுப்புதுரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மகன் நவீன் (27). அந்தியூரை அடுத்த பா்கூா், தட்டகரை வனச் சரகத்தில் வனக் காப்பாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், அலுவலகப் பணி காரணமாக தட்டக்கரையில் இருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

பா்கூா் மலைப் பாதையில் தாமரைக்கரையை அடுத்த நெய்க்கரை அருகே வளைவில் திரும்பியபோது எதிரே வந்த சரக்கு வாகனம் நவீன் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.