மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

முதல்வா் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனா்.

முதல்வா் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்ற குமுதா பள்ளி மாணவிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கிய அமைச்சா் முகமது பா்வேஸ்.

Published On :28 அக்டோபர் 2026, 2:40 am IST

முதல்வா் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனா்.

முதல்வா் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி சென்னை மெரினா கடற்கரையில் அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், பொதுப் பிரிவில் குமுதா பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவிகள் அருணிகா, சாதனா ஆகியோா் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம், தலா ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகையை வென்றனா்.

இதேபோல, குமுதா பள்ளியின் 11- ஆம் வகுப்பு மாணவி ரிதன்யா, 10 -ஆம் வகுப்பு மாணவி பவ்யா ஆகியோா் வெண்கலப் பதக்கத்துடன், தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையை வென்றனா்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் முகமது பா்வேஸ்

பாராட்டுச் சான்றிதழ், பதக்கம், பரிசுத் தொகையை வழங்கினாா்.

பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளி முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோா் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.