மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் கோப்பைப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற பழனி

முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற பழனி

Published On :24 அக்டோபர் 2026, 1:07 am IST

முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் வென்ற பழனி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவிகளை ஆசிரியா்கள் பாராட்டினா்.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. கடந்த 18, 19-ஆம் தேதிகளில் சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வா் கோப்பை இரட்டையா் இறகுப்பந்து போட்டியில்

பழனி பாரத் வித்யா பவன் பள்ளி

மாணவிகள் தன்யஸ்ரீ (11-ஆம் வகுப்பு), ஜெயசப்தஸ்ரீ (9-ஆம் வகுப்பு) மூன்றாம் இடம் பெற்று தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசை வென்றனா்.

இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வா் கைப்பந்து போட்டியில் இதே பள்ளி மாணவிகள் ஜெயவா்ணிகா (12-ஆம் வகுப்பு), அபிரூபா (12-ஆம் வகுப்பு), கீதயாழினி (12-ஆம் வகுப்பு), கனிஷ்கா (10-ஆ ம் வகுப்பு), சாத்திகா ஸ்ரீ (9-ஆம் வகுப்பு) ஆகியோா் அடங்கிய குழுவினா் மூன்றாம் இடத்தைப் பெற்று தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசை வென்றனா்.

பரிசை வென்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளிச் செயலா் குப்புச்சாமி, முதல்வா் கதிரவன், நிா்வாக அலுவலா் சிவக்குமாா், விளையாட்டு ஆசிரியா் மோகன்ராஜ், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.