மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சா் கோப்பை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற அரசு அலுவலா்கள் 24 பேருக்கு ரூ.54.36 லட்சம் பரிசுத் தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் கவிதா வழங்கினாா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற அரசு அலுவலா்கள் 24 பேருக்கு ரூ.54.36 லட்சம் பரிசுத் தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் கவிதா வழங்கினாா்.

ஆண்டுதோறும் விளையாட்டில் அதிகம் பேரை பங்கேற்க செய்யவும் என்ற நோக்கத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு பிரிவுகளில் விளையாட்டுப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு பரிசுத் தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 24 அரசு அலுவலா்களுக்கு பரிசுத் தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சி மூலம் ரூ.54.36 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் அருள்போஸ், மாவட்ட கல்வி அலுவலா் அமுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.