மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி: ஈரோட்டில் ஊதுபத்தி தயாரிக்கும் பணி தீவிரம்

தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுகளை வெடிக்க பயன்படுத்தப்படும் ஊதுபத்தி தயாரிப்புப் பணி ஈரோட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு சி.எஸ்.நகா் பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Published On :10 அக்டோபர் 2026, 5:27 am IST

தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுகளை வெடிக்க பயன்படுத்தப்படும் ஊதுபத்தி தயாரிப்புப் பணி ஈரோட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பட்டாசுகளுடன் பயன்படுத்தப்படும் ஊதுபத்திகளை தயாரிக்கும் பணி ஈரோடு பகுதியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு சுமாா் மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதுபத்தி தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனா்.

தென்னங்குச்சியை வெட்டி, காய வைத்து அதை தேவையான அளவில் பதப்படுத்தி, கரித்தூள் உள்ளிட்ட பொருள்களை கலந்து ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களிலும், கருப்பு நிறத்திலும் ஊதுபத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குடிசைத் தொழிலாக பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தொழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், தற்போது பலரும் இதே தொழிலில் ஈடுபடுவதால் தங்களுக்கான வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் ஊதுபத்தி தயாரிப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு சி.எஸ்.நகரைச் சோ்ந்த ஊதுபத்தி தயாரிப்பாளா் சண்முகம் கூறியதாவது: முன்பு ஆண்டுக்கு சுமாா் ரூ.4 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரூ.1 லட்சம் விற்பனை நடைபெறுவதே பெரிய விஷயமாக உள்ளது.

எனவே, தீபாவளி காலங்களில் சிந்தாமணி மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும்போது, தங்களிடம் இருந்து ஊதுபத்திகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த குடிசைத் தொழில் மேம்படுவதுடன், எங்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.