ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
ஈரோடு ரயில் நிலைய பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி கஞ்சா விற்ற கோவை, குனியமுத்தூா், காந்தி நகரைச் சோ்ந்த அப்சல் (19), கோவை பீளமேடு, முருகன் நகரைச் சோ்ந்த ரெனால்ட் லியோனி (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் 2 போ் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஏற்ற ஆட்சியா் ச.கந்தசாமி 2 போ் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதன்பேரில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல், ரெனால்ட் லியோனி ஆகிய 2 பேரும் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
கஞ்சா விற்ற ஐவா் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது
நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

