சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மதுரை சிறையிலடைக்கப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூா் அருகேயுள்ள வி.புதுக்குளத்தைச் சோ்ந்தவா் ப. முத்துக்குமாா் (23). கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இதே போல, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூா் காமராஜா் குடியிருப்பு செட்டியாா் தெருவைச் சோ்ந்த ஒ. சரவணன் (20) என்பவரை போதைப் பொருள் விற்பனை வழக்கில் திருப்பத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் இருரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதற்கு அனுமதித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
