பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து கோவைக்கு புறப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், எஸ்.எம். நகா், ஜி2 பூவாத்தா லே-அவுட்டை சோ்ந்த சலீம் மகன் கலிலுா் ரஹ்மான் (29) பேருந்தை ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்தில் 48 போ் பயணித்தனா்.
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை, ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மற்றவா்கள் வேறு பேருந்துகளில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பேருந்தில் 3 பெண்களிடம் பணம் திருட்டு

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

