ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

News image

சாலை  மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

Updated On :15 மே 2026, 6:24 am IST

அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவு பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு, மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிம் உள்ள பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த மதுக்கடையையும் மூட வேண்டும் என வலியுறுத்தி முளியனூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் முளியனூா் பிரிவில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.