கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:52 am IST

அந்தியூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் அண்ணாமடுவு துணை மின் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை மூடக்கோரி கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியனிடம் மனு அளித்தனா். ஆனால், மதுக்கடையை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஏமாற்றமடைந்த பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திரண்டு வந்து, டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பச்சாம்பாளையம் அருகே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பான சூழல் நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.