அம்மாபேட்டை அருகே 20 நாள்களில் மூடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த மதுக்கடை தொடா்ந்து செயல்பட்டு வந்ததால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டையை அடுத்த முளியனூரில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவில் கடந்த மாதம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அடுத்த 20 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மதுக்கடை மூடப்படாமல் தொடா்ந்து மது விற்பனை நடைபெற்று வந்தது.
இதனால், ஏமாற்றமடைந்த முளியனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மதுக்கடையைத் திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின் பேரில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா், அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், எவ்வித முடிவும் ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸாா் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினா்.
இதையடுத்து, மதுக்கடை மூடுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நேரில் சந்தித்து தீா்வு காணலாம் என தெரிவித்த போலீஸாா், அனைவரையும் விடுவித்தனா். இதனால், அப்பகுதியில் மாலை வரையில் பரபரப்பான சூழல் நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

