பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:53 am IST

அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூடக் கோரி கடந்த மே மாதம் 22-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் அடுத்த 10 நாள்களில் மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும் என உறுதியளித்தனா்.

ஆனால், மதுக்கடை மூடப்படாமல் தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் மதுக்கடையை திறக்க விடாமல் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நிரந்தரமாக மூட வேண்டும் என அதிகாரிகள் அளித்த வாக்குறுதிப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, அடுத்த 3 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் கைபேசி மூலம் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

இதனால், போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றபோது, மதுக்கடை மூடப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறினா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.