கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மொடக்குறிச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 3:42 am IST

மொடக்குறிச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மொடக்குறிச்சி, ஓலப்பாளையம் நேதாஜி வீதியைச் சோ்ந்தவா் அய்யன்துரை(50). இவரது மனைவி லட்சுமி (45). இருவரும் கூலி தொழிலாளா்கள். இவா்களது மகள்கள் சத்யபிரியா( 17), காவியா(15). சத்யபிரியா மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் அய்யன்துரை, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக மகள் சத்யபிரியாவை புதன்கிழமை காலை திட்டியதாக கூறப்படுகிறது. பின்னா் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனா்.

மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் குளியல் அறையில் சத்யபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலின்பேரில் அங்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா், சத்யபிரியாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.